மூக்கறுப்பு போர்
மூக்கறுப்பு போர் வரலாற்றில் நடந்த மிகக்கொடுமையான போர் முறைகளில் ஒன்று. அதாவது எதிரியை வெட்டி வீழ்த்தாமல் அவன் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான ஊனத்தை செயற்கையாக ஏற்படுத்தி அவன் முகத்தை சிதைப்பது. தமிழ் மண்ணில் இது போன்ற செயல் சோழர், பாண்டியர்க்கு இடையில் நடந்த போர்களில் நடந்து உள்ளது.சோழன் பாண்டிய நாட்டில் மீது போர் தொடுத்து பாண்டியன் மகனின் மூக்கையும், அவனுக்கு உதவி செய்த படைத்தலைவர்கள் மூக்கையும் அறுத்த செய்தியை சில கல்வெட்டுகள் சொல்கிறது.(1) ஆனால் உச்சகட்டமாக ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என கண்ணில் படும் அனைவரின் மூக்கை அறுத்த கொடூரமும் தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் விஜயநகர பேரரசு வலுவிளக்க தொடங்கியது. திருமலை நாயக்கரின் ஆரம்ப காலத்தில்(1625) மைசூர் அரசனான சாமராஜ உடையாருக்கு திருமலை நாயக்கருக்கும் போர் மூண்டது. திண்டுக்கல் வரை வந்த மைசூர் படையை திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நயக்கரும் வீழ்த்தினர்.(2) பின் விஜய நகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில் மதுரை, தஞ்சை செஞ்சி ஆகிய நாயக்கர்களின் கூட்டுப்படைக்கும் விஜயந...







Comments
Post a Comment