Posts

Showing posts from July, 2017

வடுகப்படை எதிர்த்த கொண்டையன் கோட்டை மறவர்

Image
1544 ஆம் ஆண்டு விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள், திருவாடானை பாண்டியர், தென்பரதவர் என பலரும் கலகங்களில் ஈடுபட்டனர். மேலும் போர்ச்சுகீசியரும் கடல்புரத்தில் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினர். இதனால் விஜயநகர அரசன் தன் படைத்தளபதியும் உறவினருமான வித்தலராஜானை (வெங்கலராஜன்) பெரும்படையுடன் அனுப்பினான். திருவனந்தபுரம் அரசனும் கயத்தாரை ஆண்டு வந்த பாண்டியனும் ஒரு ஒப்பந்தத்தின்படி விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து வந்தனர். தெங்காசி பாண்டியன் நட்புறடன் இருந்து வந்தான். முதலில் திருவிதாங்கூர் அரசானான உன்னி கேரள வர்மன் அடக்கப்பட்டான். பின் கயத்தார் பாண்டியனை ஒடுக்க அவன் ஆட்சி பகுதிக்கு வந்தான். தென்பாண்டியர் சின்னம் கடுமையாக நடந்த போரில் வெங்கலராஜனுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டது. போரில் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த மறவர் குலத்தவர் ஆயிரக்கணக்கானோர் அதில் சிறப்பாக செயல்பட்ட தளபதிகள் பத்து நபர்கள் கொண்டையன் கோட்டை மறவர்.இந்த பத்து மறவர்க்கு பாண்டியன் நாடுகல்எடுத்து உள்ளான்.பெயரும் வம்ச பெயரும் தமிழ் நாடு மற்றும் இந்திய தொல்லியல் துறையின் ஆவணமாக உள்ளது. இ...

கொத்துத்தாலி(பெருந்தாலி) மறவர்களான ஊர்காடு சேதுராயர்கள்

Image
திருக்கோயில்களில் திருப்பணி செய்வதில் அந்நாளைய ஜமீன்தார்கள் பேரார்வம் கொண்டிருந்தார்கள். அவர்களைப் போலவே அவர்களுடைய வாரிசுகளும் அந்த அக்கறையில் கொஞ்சமும் குறைவில்லாமல் தம் ஆன்மிகப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தவகையில் இன்றளவும் ஊரின் ஒவ்வொரு மண்டபமும், கோயில் திருவிழாக்களும் ஜமீன்தாரை நினைவூட்டிக்கொண்டேயிருக்கின்றன என்றால், அந்தப் பெருமை ஊர்காடு ஜமீனையே சாரும். தாமிரபரணி நதிக்கரையில் நகர சாயல் கொண்டு விளங்கும் ஒரு கிராமம் ஊர்க்காடு. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது.  ஊர்க்காடு கிராமத்தில், ‘முகவை நகர்’, ‘பூவை நகர்’ என்ற சிறப்பு வாய்ந்த இரு பகுதிகள் விளங்கின. ஊர்க்காடு ஜமீன்தார்கள் இந்த நகரை சீரும் சிறப்புமாக  ஆண்டுவந்திருக்கிறார்கள். இதற்கு இவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் இன்றும் சாட்சிகளாக நிற்கின்றன. சிங்கம்பட்டி குறுநில மன்னருக்கு ‘தீர்த்தபதி’ என்ற சிறப்பு இருப்பது போலவே ஊர்க்காடு குறுநில மன்னர்களுக்கு ‘க்ஷேத்திரபதி’ என்ற சிறப்புப் பட்டம் உண்டு. ஊர்க்காட்டில் பல அபூர்வ க்ஷேத்திரங்கள் அமைந்திருந்தன. பொதிகை மலைக்கு வந்த அகத்தியப் பெருமான், தாமிரபரணி...

தங்கக் கொடிமரம் நிறுவி மங்காத புகழ் பெற்ற மருதப்பத்தேவர்

Image
ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள் தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி  அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத் திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். ஊத்துமலை ஜமீன்தார்கள் சின்னம்  ஜமீன்தார்கள்  தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று விளங்கின. மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊத்துமலை ஜமீன்தார்கள். மதுரை மன்னன் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊத்துமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது.  இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன. ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம்...