வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி திரிகூடபதி சிவனனைந்த தேவர்கள் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு செய்த திருப்பணிகள்

சேதுபதி என்றால் சேதுவின் அதிபதி.
தீர்த்தபதி என்றால் தாமிரபரணிக்கு மூலமான புனிதமான பான தீர்த்தத்துக்கு அதிபதி.
அதே போல் திருகூடபதி என்றால் திரிகூடம் என்னும் திருக்குற்றாலத்தின் அதிபதி.


பாண்டியர் மெய்காவல் படையில் இருந்து பராக்கிரம பாண்டியனின் ஆணைக்கு இணங்க ஒரு கொள்ளக்கூட்டத்தை ஒழித்து அக்கூட்டத்தின் தலைவன் தலையை மன்னன் முன் வைக்க செம்புலிதேவன் என்ற பட்டத்துடன் வடகரை அரசாட்சி பாண்டியனால் (கி.பி 1391ல்) வழங்கப்படுகிறது.(1)
குற்றாலநாதர் கோவில் திருப்பணிகள்:
=======================================
இவர்கள் இக்கோவிலில் பாண்டியர் காலம் முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலம் வரை திருப்பணி செய்து உள்ளனர்.


1)முதலாவது அரசர் (செம்புலி சிவனணைஞ்சாத் தேவர் 1391-1434 (2).)
குற்றாலிங்கம் குழல்வாய்மொழியம்மன் பொது மண்டபம், குற்றால அன்னசத்திரத்தை கட்டிமுடித்தார் . இவரின் ஸ்தானாபதி (மந்திரி (அ) அமைச்சர். பொதுவாக காராள வேளாளர் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்) வயித்தியப்ப பிள்ளை வயித்திய விசால மண்டபம் கட்டி முடித்தார்.(3)



2) இரண்டாவது அரசர் (வீரபாண்டியன் காலத்தவரான முத்தனைஞ்சா தேவர் 1434-1461 (4)) குற்றாலிங்கம் குழல்வாய்மொழி உட்சுற்று பிரகாரம் செய்து முடித்தார்.(5)
3)மூன்றாவது அரசர் (காளத்தியப்ப தேவர் (1462-1490)(6).) சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் கோவில், சுப்பிரமணியர் தேர் ஆகியவற்றை செய்து முடித்தார்.(7)



4)ஆறாவது அரசர் (குலசேகர ராஜா (பாண்டியம்) காலத்தவர். திரிகூட ராஜகோபாலத்தேவர் 1536-1595)(8).குற்றாலநாதர் கோவில் தட்டொட்டியும், பசுப்பிரையும் கட்டிமுடித்தார்.(9)


5)ஏழாவது அரசர் (பெரியன் சின்னணைஞ்சாத் தேவர் 1596-1629).(10)
தீர்த்த மண்டபம், சுற்றுபிரகாரம், நடைகாற்பாவல் முதலியவைகளை கட்டி முடித்தார்.(11)


6)எட்டாவது அரசர் (சிவனடியாத்தேவர் 1630-1659) துவஜஸ்தம்பம் அஷ்டாபந்தன கும்பாபிஷேகம் செய்து முடித்தார்.(12)


7)ஒன்பதாவது அரசரும்,சின்ன பட்டமும்(பெரியசாமி செம்புலி சின்னணைஞ்சாத்தேவர், சின்னப்பட்டம் ராஜகோபாலத்தேவர் 1660-1721) பாண்டியன் செய்த சித்திர சபைக்கு செப்பேடு வேய்ந்தார்கள், மேல்ச்சபை, கீழ்ச்சபை கல் வரிசை தளவரிசை திருப்பணி நடத்தினர்,ஸ்படிக லிங்கம் அமைத்தனர்,சித்திரங்கள் எழுதி வைத்தனர்,சபை சுற்று சிகரம், முன் மண்டபம், தெப்பக்குளம், நடுமண்டபம், கோபுரம் ஆகியவற்றை கட்டி முடித்தனர்.(13)




சித்திர சபைக்கு செப்பேடு வேய்ந்த அரிய சேவையை பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ வேளாளர் குலத்தவரான திரிகூடராசப்ப கவிராயர்(வடகரை அரசவை புலவர்) இயற்றிய குற்றாலக்குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் புகழ்கிறது.(14)




(திருக்குற்றாலக் குறவஞ்சி)
"பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
பாண்டியனார்முதல் சிற்றொடு வேய்ந்த
தென்னாருஞ் சித்ர சபையை எங்கள்
சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற"(15)


கொலு மண்டபம், திரிகூட மண்டபம், தேர் மண்டபம், பரமானந்தத் தேப்பு, குறிஞ்சிப்படித்துறை ஆகியவை அகப்பட்டன.(16)



தெய்வப் பணியில் பேரார்வம் கொண்ட இந்த இரு சகோதரர்களும் இன்றும் குற்றாலநாதர் சன்னிதியில் கொடிமரத்தின் தென்பக்கம் வடக்கு நோக்கி கற்சிலையாக இன்றும் குற்றாலநாதரை வழிபட்டு கொண்டு இருக்கிறார்கள்.(17)




பின் 1891 ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் அருவியின் வெள்ளத்தில் காசிலிங்க சுவாமி கோவில், தெற்கு வீதி செண்பக வினாயகர் கோவில் அகியவை அடித்து செல்லப்பட்டது.
வைத்தியவிலாச மண்டபம், அருவிக்கரை பாலம், கோவிலின் சில பகுதிகள் சேதம் அடிந்தன. அதிக பொருள் செலவில் அத்தனையும் இம்மரபினரால் சரி செய்யப்பட்டது.(18)
(முழு விபரங்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் ஆவணமான திருக்குற்றாலம் என்ற நூலில் உள்ளது. நூலில் செய்தி படங்கள் இணைப்பில்)
பதினான்காம் நூற்றாண்டு முதல் நெல்லை பகுதியில் பெரும் ஆதிக்கம் செலுத்திவர்கள் இம்மரபினர். முழு திருவிதாங்கூரையும் நடுங்க வைத்தவர் என்று சொன்னால் மிகை அல்ல. திருவிதாங்கூரையும் வேனாட்டையும் கொள்ளை கொண்ட மகாராசா திருவேனாத்தேவர் என மொத்த கேரளத்தையும் ஆட்டிபடைத்த இவர்கள் முழு வரலாற்றை மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்.
அடிக்குறிப்புகள்:
=================
1-Mackenzie Manuscripts
2,4,6,8,10-வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்
3,5,7,9,11,12,13,14,16,17,18-திருக்குற்றாலம்
15-திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி

Comments

  1. மிக அருமையான பதிவுகள் சான்றுடன்.. உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வடகரை ஆதிக்கம் ஜமீன் சொக்கம்பட்டியின் அரண்மனை மற்றும் ஜமீன்தார்களின் புகைப்படம் ஏதாவது இருந்தால் பதிவிடுங்கள் ஐயா. மேலும் தங்கள் பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  3. அருமை.. மண்ணின் மைந்தர்கள்.. இன்று இவர்களின் வம்சாவளி நிலை என்ன. அரசு சீர்தூக்கி பார்க்கவேண்டும். நாகரீகத்தின் மாற்றம் அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்..

    ReplyDelete
  4. Vadagarei mannerhel pandyer vamsavaliei cernthaverhel avarhel ceppedu kalvettil kayel cennem idempetru ullathu

    ReplyDelete
    Replies
    1. தென்காசி பாண்டியர் மரபினர்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

மூக்கறுப்பு போர்

வடுகப்படை எதிர்த்த கொண்டையன் கோட்டை மறவர்

திருவிதாங்கூர் மறவர் படை