சேதுபதிகளுக்கும் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கும் இடையில் நடந்த போர்கள்


மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் 1673 ஆம் ஆண்டு தஞ்சை மீது படையெடுத்து தஞ்சை நாயக்கர் மன்னனான விஜய ராகவ நாயக்கரை கொலை செய்துவிட்டு தன் தம்பியான அழகிரி நாயக்கரை தஞ்சை அரசனாக அறிவித்தார்.
விஜய ராகவ நாயக்கரின் மகன் பீஜப்பூர் சுல்தான் உதவியை நாட சுல்தான் தன் தளபதி வெங்கோஜி தலைமையில் 
படையை அனுப்பிவைக்கிறார்.படை நடத்திவந்த வெங்கோஜி அழகிரி நாயக்கரை வென்றவுடன் விஜய ராகவ நாயக்கர் மகனை அரசன் ஆக்காமல் தஞ்சை அரசனாக தன்னை அறிவித்துக்கொண்டு தஞ்சையை ஆட்சி செய்யத்துவங்குறார். இவ்வாறாக தஞ்சை மராத்தியர் ஆட்சி துவங்குகிறது.(1)
(வெங்கோஜி மராத்தியர் மன்னர் சத்ரபதி சிவாஜியின் தம்பி போன்ஷ்லே மராத்தியர்)

1) கி.பி 1698
கிழவன் சேதுபதி - ஷாஜி
1686 ஆம் கிழவன் சேதுபதி மதுரை நாயக்கர் மீது நடத்திய படையெடுப்பில் சேதுபதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஷாஜி படை உதவி செய்தார்.(2)
போரில் வென்ற சேதுபதி செய்த ஒப்பந்ததின்படி 12 ஆண்டுகள் தஞ்சைக்கும் பாம்பாற்றுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பகுதியை விட்டுக்கொடுத்தார்.(3)
12 ஆண்டுகள் கழித்து ஒப்பந்ததின்படி மீண்டும் சேதுபதியிடம் பெற்ற பகுதியை தஞ்சை அரசர் ஒப்படைக்க மறுத்தார்.இதன் காரணமாக தஞ்சை மீது கிழவன் சேதுபதி படை எடுத்தார். வெற்றி வாகை சூடினார். அம்பாரி ஆற்றுக்கு தெற்க்கில் உள்ள அனைத்து பகுதியையும்,இழந்த பகுதிகளையும் சேர்த்து கைபற்றினார்.(4)
2)கி.பி 1709
கிழவன் சேதுபதி -ஷாஜி
1709 ஆம் ஆண்டு சேது நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்ப்பட்டது. நிலமையை தனக்கு சாதகமாக எண்ணிய தஞ்சை மன்னர் பெரும்படை ஒன்றுடம் மறவர் நாட்டின் மீது படை எடுத்தார்.ஆனால் அவரின் படை முழுவதும் விழ்த்தப்பட்டது.இறுதியில் தஞ்சை மன்னர் சேதுபதியிடம் சமாதானம் வேண்டி நின்றார்.(5)


3)கி.பி 1730-35
குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி- துக்கோஜி
இந்த மன்னர் ஆட்சி காலத்தில் மறவர் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. வலிமை குன்றியதால் நாட்டை கைப்பற்றிவிடலாம் என எண்ணி தஞ்சை மன்னர் மீண்டும் படை எடுத்தார். ஆனால் சேதுபதி சிவகங்கை ,எட்டையபுரம் வீரர்கள் உதவியுடம் தஞ்சை மன்னர் முயர்ச்சியை முறியடித்தார்.


இந்த முயற்சியில் சிறப்பான போராற்றலை வெளிப்படுத்தி வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ராஜ குல அகமுடையாரான சேதுதளயாய் வைரவன் சேர்வை (6)


4) கி.பி 1740
சிவக்குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி-பிரதாப் சிங்
1740 ஆம் ஆண்டு மீண்டும் தஞ்சை படை எடுப்பு தொடர்ந்தது. சேது தளவாய் வெள்ளையன் சேர்வை (ராஜ குல அகமுடையார்) படை எடுப்பை படுதோல்வி அடையச்செய்கிறார்.(7)


5) கி.பி 1763
செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி -பிரதாப் சிங்
செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தின் 14 ஆட்சி ஆண்டில் சேது நாட்டின் தஞ்சை மராத்தியர் வட பகுதியை ஆகிரமித்து ராமநாதபுரம் நோக்கி வந்தது இந்த படை எடுப்பையும் சேது தளவாய் வெள்ளையன் சேர்வை முறியடித்தார்.(8)


(வெள்ளையன் சேர்வைக்காரர் சேது நாட்டின் மிகச்சிறந்த தளவாயாக விளங்கியவர்.)

வெள்ளையன் சேர்வைக்காரர் மாதிரி பாடம் 

6) கி.பி 1771
முத்துராமலிங்க சேதுபதி ( முத்து திருவாயி நாச்சியார்) - துல்ஜாஜி
மன்னர் முத்துராமலிங்க சேதுபதி பாலகனாய் இருந்த சமயம் அது. அதனால் அவர் தாயார் முத்து திருவாயி நாச்சியார் ஆரசியாராக ஆண்டு வந்தார்.
1771 ஆம் ஆண்டு தஞ்சை மன்னர் துல்ஜாஜி 4000 குதிரை வீரர்கள், 50000 சிப்பாய்கள் என பெரும் படையுடம் சேதுநாட்டின் மீது படை எடுத்து வடக்கு பகுதியை தாக்கினார்.சீமைக்கு உரிமை கூறிய மாப்பிள்ளை தேவர் தஞ்சை படைகளுடன் சேர்ந்து கொள்கிறார்.
எதிர்பாராத தாக்குதலில் முதுவார் நத்தம் கிராமத்தில் இந்த தாக்குதலை எதிர்த்து சண்டையிட்ட மறவர் படை 96 மறவர்களை இழந்து ஆறுமுகக்கோட்டைக்கு பின்வாங்கியது.சுந்தரபாண்டியன் பட்டினம், வாரியூர், கண்ணன் குடி, மங்கலக்குடி, கொண்ட வனந்தான் அனுமந்தக்குடி ஆகிய மறவர் நிலைகளை கைப்பற்றி தஞ்சைப்படி முன்னேரியது. (9)


அடுத்து ராமநாதபுரம் கோட்டைக்கு முகப்பாக இருந்த ஆறுமுகக்கோட்டையும் வீழ்ந்தது.அடுத்துன் இருபது கல் தொலைவில் இருந்த ராமநாதபுரம் கோட்டையை நெருங்கி முற்றுகை இட்டது.ராணி முத்து திருவாயி நாச்சியாரும் பிரதானி பிச்சைய பிள்ளையும் இறுதி கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.சேதுபதியிடம் முன்பு பல உதவிகள் பெற்ற நவாப் இந்த முறை பல முறை தகவல் அனுப்பியும் உதவ முன் வராமல் அமைதி காத்தார்.சேதுபதி மன்னர் அனுமதியுடன் பண்டகசாலை நடத்தி வந்த டச்சு படை ஒன்று பிராதானியின் ஆணைக்கு காத்து இருந்தது.(10)


ஒருவேளை கோட்டை கைப்பற்றப்பட்டால் எதிரியிடம் சிக்கி மானம் இழக்க நேரிடும் என எண்ணிய அரசியார் மற்றும் கோட்டையில் அரச குடும்ப மகளிரும் அக்கினி புகுவதற்க்கு அமைக்கப்பட்ட வெடிமருந்துகளுடன் கூடிய மேடை ஒன்று தயராக இருந்தனர்.(11)
(அரச வம்சத்து பெண்கள் எதிரியிடம் சிக்காமல் கூட்டமாக தீப்பாயும் இந்த முறை
ஜௌஹர் என சொல்லப்படுகிறது.
https://en.m.wikipedia.org/wiki/Jauhar)


போர் துவங்கி 19 நாட்கள் ஆகியும் எந்த முடியவும் எட்டப்படவில்லை. தஞ்சை அரசர் துல்ஜாஜி திருப்புல்லாணி அரண்மனையில் தங்கி அவ்வப்போது போர் நடவடிக்கைகளை கவனித்து வந்தார்.மறவர்கள் சரணடைந்த பின் தொடர்ந்து சிவகங்கை சீமையையும், தொண்டைமான் சீமையையும் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்.(12)
ராமநாதபுரம் அரசியார் ஒரு திட்டம் வகுத்தார் அதன்படி கோட்டைக்கு மேற்கே நீர் நிறைந்த நிலையில் இருந்த பெரிய கண்மாயில் ஒரு பெரிய உடைப்பு இருபதாம் நாள் அதிகாலையில் ஏற்ப்படுத்தப்பட்டது.
பெரும் இரைச்சலுடன் கடல் போல நீர் கண்மாய் கரையை கடந்து கோட்டையை நோக்கி வந்தது.
கோட்டைக்கு மேற்கு, வடக்கு பகுதியை கடந்து கிழக்கு பகுதியில் மூகாமிட்டு இருந்த தஞ்சை படையின் பாசரையை அந்த வெள்ளம் சில நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கச்செய்தது.
ஆயுதங்கள், வெடிமருந்து, அரிசி முட்டைகள், சாராய பீப்பாய்கள், பொதி வண்டிகள், மாடுகள், குதிரைகள் என அத்தனையும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தஞ்சை வீரர்கள் பலர் மாண்டனர், உயிர் தப்பியவர்கள் அங்கும் இங்கும் சிதரி ஓடினர். முற்றுகை தகர்க்கப்பட்டு
படை எடுப்பு முறியடிக்கப்பட்டது. இனி போரை தொடர்ந்து நடத்த முடியாது என உணர்ந்த தஞ்சை மன்னர் அரசியாருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு ஒரு லச்சம் வெள்ளி நாணயங்களுடன் சில சலுகைகள் மட்டும் பெற்றுக்கொண்டு தஞ்சைக்கு திரும்பினார்.(13)


கோட்டையை முற்றுகையிட்ட எதிரிப்படையை நீர் தேக்கதின் மூலம் சிதரடிக்கும் யுக்தியை சமிபத்தில் வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் படத்தில் காட்சி ஆக்கி இருபார்கள்.
(இந்த இணைப்பில் அதை காணலாம்
👉 https://youtu.be/DcccjdyErQU )
இந்த யுக்தியை 1771 ஆம் முத்து திருவாயி நாச்சியார் என்ற மறவர் குல அரசி கையாண்டு வெற்றியும் கண்டு உள்ளார்.
சேதுபதிகளுக்கும் தஞ்சை மரட்டிய மன்னர்களுக்கு இடையில் நடந்த ஆறு போர்களில் அனைத்திலும் சேதுபதிகள் வெற்றி வாகை சூடி உள்ளனர்.(வெற்றி விகிதம் 100%)இதே போல மதுரை நாயக்கர்கள் உடன் நடந்த ஐந்து போர்களில் நான்கில் சேதுபதிகள் வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (வெற்றி விகிதம் 80%).
சோழநாட்டை தொடர்ந்து பாண்டிய நாட்டில் ஆதிக்கம் செலுத்த முயன்ற தஞ்சை மராத்தியர் முயற்சிகள் அத்தனையும் சேதுபதிகளால் முறியடிக்கபட்டது.
அடிக்குறிப்புகள்:
=================
1)History of the Nayaks of Madura - R.Sathyanatha Aiyar
2,3) கிழவன் சேதுபதி- மீ.மனோகரன்
4)Ramnad Manual-T.Rammohan Row
5)Jesuit's Letters
6 ,7,8) சேதுபதிகள் சரித்திரம் - முனைவர் எஸ்.எம்.கமால்
9,10,11,12,13)Military Country Correspondence,vol I9

Popular posts from this blog

மூக்கறுப்பு போர்

வடுகப்படை எதிர்த்த கொண்டையன் கோட்டை மறவர்

திருவிதாங்கூர் மறவர் படை