Posts

Showing posts from September, 2017

சேதுபதிகளுக்கும் தஞ்சை மராத்திய மன்னர்களுக்கும் இடையில் நடந்த போர்கள்

Image
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் 1673 ஆம் ஆண்டு தஞ்சை மீது படையெடுத்து தஞ்சை நாயக்கர் மன்னனான விஜய ராகவ நாயக்கரை கொலை செய்துவிட்டு தன் தம்பியான அழகிரி நாயக்கரை தஞ்சை அரசனாக அறிவித்தார். விஜய ராகவ நாயக்கரின் மகன் பீஜப்பூர் சுல்தான் உதவியை நாட சுல்தான் தன் தளபதி வெங்கோஜி தலைமையில்  படையை அனுப்பிவைக்கிறார்.படை நடத்திவந்த வெங்கோஜி அழகிரி நாயக்கரை வென்றவுடன் விஜய ராகவ நாயக்கர் மகனை அரசன் ஆக்காமல் தஞ்சை அரசனாக தன்னை அறிவித்துக்கொண்டு தஞ்சையை ஆட்சி செய்யத்துவங்குறார். இவ்வாறாக தஞ்சை மராத்தியர் ஆட்சி துவங்குகிறது.(1) (வெங்கோஜி மராத்தியர் மன்னர் சத்ரபதி சிவாஜியின் தம்பி போன்ஷ்லே மராத்தியர்) 1) கி.பி 1698 கிழவன் சேதுபதி - ஷாஜி 1686 ஆம் கிழவன் சேதுபதி மதுரை நாயக்கர் மீது நடத்திய படையெடுப்பில் சேதுபதியுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு ஷாஜி படை உதவி செய்தார்.(2) போரில் வென்ற சேதுபதி செய்த ஒப்பந்ததின்படி 12 ஆண்டுகள் தஞ்சைக்கும் பாம்பாற்றுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பகுதியை விட்டுக்கொடுத்தார்.(3) 12 ஆண்டுகள் கழித்து ஒப்பந்ததின்படி மீண்டும் சேதுபதியிடம் பெற்ற பகுதியை தஞ்சை அரச...