வடுகப்படை எதிர்த்த கொண்டையன் கோட்டை மறவர்
1544 ஆம் ஆண்டு விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள், திருவாடானை பாண்டியர், தென்பரதவர் என பலரும் கலகங்களில் ஈடுபட்டனர். மேலும் போர்ச்சுகீசியரும் கடல்புரத்தில் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினர். இதனால் விஜயநகர அரசன் தன் படைத்தளபதியும் உறவினருமான வித்தலராஜானை (வெங்கலராஜன்) பெரும்படையுடன் அனுப்பினான். திருவனந்தபுரம் அரசனும் கயத்தாரை ஆண்டு வந்த பாண்டியனும் ஒரு ஒப்பந்தத்தின்படி விஜயநகர மேலாதிக்கத்தை எதிர்த்து வந்தனர். தெங்காசி பாண்டியன் நட்புறடன் இருந்து வந்தான். முதலில் திருவிதாங்கூர் அரசானான உன்னி கேரள வர்மன் அடக்கப்பட்டான். பின் கயத்தார் பாண்டியனை ஒடுக்க அவன் ஆட்சி பகுதிக்கு வந்தான். தென்பாண்டியர் சின்னம் கடுமையாக நடந்த போரில் வெங்கலராஜனுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்பட்டது. போரில் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த மறவர் குலத்தவர் ஆயிரக்கணக்கானோர் அதில் சிறப்பாக செயல்பட்ட தளபதிகள் பத்து நபர்கள் கொண்டையன் கோட்டை மறவர்.இந்த பத்து மறவர்க்கு பாண்டியன் நாடுகல்எடுத்து உள்ளான்.பெயரும் வம்ச பெயரும் தமிழ் நாடு மற்றும் இந்திய தொல்லியல் துறையின் ஆவணமாக உள்ளது. இ...