Posts

வடகரை ஆதிக்கம் சொக்கம்பட்டி திரிகூடபதி சிவனனைந்த தேவர்கள் திருக்குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு செய்த திருப்பணிகள்

Image
சேதுபதி என்றால் சேதுவின் அதிபதி. தீர்த்தபதி என்றால் தாமிரபரணிக்கு மூலமான புனிதமான பான தீர்த்தத்துக்கு அதிபதி. அதே போல் திருகூடபதி என்றால் திரிகூடம் என்னும் திருக்குற்றாலத்தின் அதிபதி. பாண்டியர் மெய்காவல் படையில் இருந்து பராக்கிரம பாண்டியனின் ஆணைக்கு இணங்க ஒரு கொள்ளக்கூட்டத்தை ஒழித்து அக்கூட்டத்தின் தலைவன் தலையை மன்னன் முன் வைக்க செம்புலிதேவன் என்ற பட்டத்துடன் வடகரை அரசாட்சி பாண்டியனால் (கி.பி 1391ல்) வழங்கப்படுகிறது.(1) குற்றாலநாதர் கோவில் திருப்பணிகள்: ======================================= இவர்கள் இக்கோவிலில் பாண்டியர் காலம் முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலம் வரை திருப்பணி செய்து உள்ளனர். 1)முதலாவது அரசர் (செம்புலி சிவனணைஞ்சாத் தேவர் 1391-1434 (2).) குற்றாலிங்கம் குழல்வாய்மொழியம்மன் பொது மண்டபம், குற்றால அன்னசத்திரத்தை கட்டிமுடித்தார் . இவரின் ஸ்தானாபதி (மந்திரி (அ) அமைச்சர். பொதுவாக காராள வேளாளர் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்) வயித்தியப்ப பிள்ளை வயித்திய விசால மண்டபம் கட்டி முடித்தார்.(3) 2) இரண்டாவது அரசர் (வீரபாண்டியன் காலத்தவரான முத்...

மூக்கறுப்பு போர்

Image
மூக்கறுப்பு போர் வரலாற்றில் நடந்த மிகக்கொடுமையான போர் முறைகளில் ஒன்று. அதாவது எதிரியை வெட்டி வீழ்த்தாமல் அவன் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான ஊனத்தை செயற்கையாக ஏற்படுத்தி அவன் முகத்தை சிதைப்பது. தமிழ் மண்ணில் இது போன்ற செயல் சோழர், பாண்டியர்க்கு இடையில் நடந்த போர்களில் நடந்து உள்ளது.சோழன் பாண்டிய நாட்டில் மீது போர் தொடுத்து பாண்டியன் மகனின் மூக்கையும், அவனுக்கு உதவி செய்த படைத்தலைவர்கள் மூக்கையும் அறுத்த செய்தியை சில கல்வெட்டுகள் சொல்கிறது.(1) ஆனால் உச்சகட்டமாக ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என கண்ணில் படும் அனைவரின் மூக்கை அறுத்த கொடூரமும் தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது. திருமலை நாயக்கர் காலத்தில் விஜயநகர பேரரசு வலுவிளக்க தொடங்கியது. திருமலை நாயக்கரின் ஆரம்ப காலத்தில்(1625) மைசூர் அரசனான சாமராஜ உடையாருக்கு திருமலை நாயக்கருக்கும் போர் மூண்டது. திண்டுக்கல் வரை வந்த மைசூர் படையை திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நயக்கரும் வீழ்த்தினர்.(2) பின் விஜய நகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில் மதுரை, தஞ்சை செஞ்சி ஆகிய நாயக்கர்களின் கூட்டுப்படைக்கும் விஜயந...

மாமன்னர் பூலித்தேவர் நடத்திய போர்கள்

Image
நன்றி:பூலித்தேவர் சிந்து. -டாக்டர்.ந.ராசையா